எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சந்தர்பவாதிகள் இல்லா இடம் அநீதிகள் தலை தூக்காது.. சந்தர்பவாதிகளை...

சந்தர்பவாதிகள் இல்லா இடம்
அநீதிகள் தலை தூக்காது..
சந்தர்பவாதிகளை வளர்ப்பதும்
மக்களாகிய நாமே..
நாம் விழித்திருக்க எவரும்
நம்மை ஏமாற்ற முடியாது..
மக்களாகிய நாம் ஒன்றுபடுவோம்
நல்ல பாரதம் உருவெடுக்க..!!
என்னிறைவா
என்னிலும் சுயநலம்
இருப்பின் இன்றே அதை
அழித்து போடுவாய்..
நான் மனிதனாய் வாழவிரும்புகிறேன்..!!
தீமை தவிர்க்க
நன்மை கெடுக்கும்
கொடியவனாக வாழவேண்டாம்..
நன்மை விளைக்க
தீமை சூழ்ந்தும்
பின்னடை கொணரா
மனிதனாக மரிக்கவேண்டும்..!

..கவிபாரதி..

பதிவு : கவிபாரதி
நாள் : 26-Jun-14, 10:14 am

மேலே