எண்ணம்
(Eluthu Ennam)
உறவுகளுக்கிடையில் திருமணம் செய்து கொள்வது என்பது எமது சமுதாயத்தில் மிக சாதாரண ஒன்றாக இருந்து வருகின்றது. வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு புலம்பெயர்ந்து அறிவு வளர்ச்சியடைந்த சமூகத்தில் வேரூன்றிய பின்பும் இந்த நடைமுறையிலிருந்து எமது சமுதாயம் விடைபெறுவதென்பது நடைமுறைச் சாத்தியம் அற்றதாகவே பார்க்கப்படுகிறது.
தாயின் ஆண்சகோதரத்தின் பிள்ளைகளை அல்லது தந்தையின் பெண் சகோதரத்தின் பிள்ளைகளை திருமணம் செய்வது அதாவது எதிர் பாலின உறவுகளின் பிள்ளைகளுக்கிடையே நடைபெறும் திருமணத்தில் அனுமதி வழங்குதல் என்பது காலங்காலமாக நடைமுறையில் இருந்து வருகின்றது.
இவாறான திருமண நடைமுறை வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒரிரு தசாப்தகாலத்திற்கு முன்பு இருந்ததாகவும் அதனால் ஏற்பட்ட மருத்துவரீதியான விளைவுகளை ஆராச்சிபூர்வமாக கண்டறிந்து அதற்கான விளிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி அதிலிருந்து மீண்டிருக்கின்றார்கள் மேற்குலக நாடுகள்.
மருத்துவ ரீதியான விளைவுகள் என்று பார்க்கின்றபோது. ஒரே தலைமுறையிலிருந்து வருகின்ற இரண்டு மரபணுக்கள் இணைகின்ற போது அங்கே மூளை வளர்ச்சி குன்றிய பிள்ளைகளும், கற்றல் திறன் குறைவடைந்த/ அறிவாற்றல் ஒத்திசைவு குன்றிய ( cognitive dissonance) பிள்ளைகளும், சமூகத்தொடர்பாடல் வளர்ச்சி குறைந்த பிள்ளைகளும் உருவாகுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறான திருமணங்களால் உருவாகின்ற சிசுக்கள் பிழையான மரபணு பொருத்தப்பாட்டை கொண்டிருப்பதால் இருதயக் கோளாறுகள், இறந்து பிறத்தல், பிறந்து ஒரு வருடத்துக்குள் இறந்துவிடுதல் போன்ற தாக்கங்களுக்கு உட்படுவதாக ஆய்வின் முடிவுகள் வெளிக்காட்டுகின்றன.
பாகிஸ்தான், இலங்கை, இந்தியா,துருக்கி,ஈரான்,ஈராக்,சோமாலியா, மொரோக்கோ போன்ற நாடுகளிலிருந்து வந்த முதல் தலைமுறை நாட்டவர்களிடையே இன்றும் இந்த திருமண நடைமுறை வழக்கிலிருந்து வருவதாக அறியப்படுகிறது.
இங்கு பிறந்து வளர்ந்த இன்று இளைஞர்களாக இருக்கின்றவர்கள் பலருடன் இவ்விடையம் பற்றி உரையாடுகின்றபோது அவர்கள் பார்வையில் பெற்றோர்களின் இருபால் சகோதரர்களுக்கிடையில் வேறுபாடுகாண அவர்களால் முடிவதில்லை என்ற கருத்தே வெளிப்படுகின்றது. அதாவது மாமாவின் பிள்ளைகளும் சகோதரர்களே, அவர்களை வாழ்க்கைத்துணையாக ஏற்றுக் கொள்ள முடியாது என்ற மனநிலைதான் அவர்கள் மத்தியில் இருக்கின்றது.
எனவே பெற்றோர்களின் இருபாலார் சகோதரர்களின் பிள்ளைகளையும் “சகோதரர்கள்” என்ற மனப்பாங்கை வளர்த்தெடுக்கும் பண்பை/மனப்பாங்கை இனியாவது எமது சமூகம் வளர்த்தெடுக்கும் என்ற நம்பிக்கையோடும் உறவுகளுக்கிடையே விரிசல்களை தவிர்ப்பதற்கும் வளிவகுக்கும் என்ற எதிர்பார்ப்போடும் இப்பதிவு!
அம்மி மிதித்து
ஆன் , பெண் என இருமணம் புரிந்து கொள்ளாமலே பெற்றோர்கள் போடும் புரிந்துணர்வு ஒப்பந்தம்
திருமணங்கள் ஏன் இவ்வளவு ஆடம்பரமாக நடத்த படுகிறது ?