அமர காவியம் பாடுதே

அழகு நிலாவின் பவனியிலே
அமைதி கொஞ்சும் இரவினிலே
அல்லி மலர்ந்தே ஆடுதே
ஆடும் காரணம் ஏதோ?

களங்க மில்லா என் மனதிலே
கலையழகே உம தன்பாலே
இன்பம்உதயம் ஆவது போலே
இதய உறவி னாலே...

அல்லி மலர்ந்து ஆடுதே
அமர காவியம் பாடுதே


கவிஞர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (18-Mar-11, 11:48 pm)
பார்வை : 92


மேலே