நீ இன்றி நானும் இல்லை
நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
வழி எங்கும் உந்தன் முகம் தான்
வலி கூட இங்கே சுகம் தான்
தொடுவானம் சிவந்து போகும்
தொலை தூரம் குறைந்து போகும்
கரைகின்ற நொடிகளில் நான் நெருங்கி வந்தேனே
இமை உன்னை பிரியமாட்டேன் துளி தூரம் நகரமாட்டேன்,
முகம் பார்க்க தவிக்கிறேன் என் இனிய பூங்காற்றே...
ஓ சாந்தி, சாந்தி, ஓ சாந்தி
என் உயிரை உயிராய் நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி
நான் வந்தேன், வந்தேன் உன்னை தேடி.. ஒஹ்ஹ்ஹ்..
நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
உன்னை காணும், நேரம், வருமா…வருமா?
இரு கண்கள் மோட்சம் பெறுமா?
விரலோடு விழியில் வாடும்
விரைகின்ற காலம் நோகும்
இருந்தாலும் வருகிறேன்
உன் மடியில் நான் தூங்க
என்னை வந்து உரசும் காற்றே
அவளோடு கனவில் நேற்றே
கை கோர்த்து நெருங்கினேன் கண் அடித்து நீ ஏங்க...
ஓ சாந்தி, சாந்தி, ஓ சாந்தி
என் உயிரை உயிராய் நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி
நான் வந்தேன், வந்தேன் உன்னை தேடி.. ஓ..