மனிதா கடவுளர் வாகனம் கவனித்தாயா?

மனிதா
கடவுளர் வாகனம்
கவனித்தாயா?
ஒரு கடவுள் - காளை கொண்டான்
ஒரு கடவுள் - மயில் கொண்டான்
ஒரு கடவுள் - எலி கொண்டான்
ஒரு கடவுள் - கருடன் கொண்டான்
எந்தக் கடவுளையும்
விலங்கு சுமந்ததன்றி
மனிதன் சுமந்ததில்லை
மனிதனைச் சுமக்கச் சொன்னால்
கடத்திவிடுவானென்று
கடவுளுக்குத் தெரியாதா?


கவிஞர் : வைரமுத்து(2-May-14, 4:21 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே