தமிழ் கவிஞர்கள்
>>
பாரதிதாசன்
>>
காதல்பசி
காதல்பசி
நேற்று வந்தேன் இல்லையே -- நான்!
நீ இல்லையே!
காற்றுவந்த சோலையில் எனைக்
கண்டுசிரித்த முல்லையே! (நேற்று)
ஆற்றங்கரையின் ஓரம் -- மாலை
ஆறுமணி நேரம் -- நீ
வீற்றிருப்பாய் என நினைத்தேன்
விளைத்தாய் நெஞ்சில் ஆரவாரம்!
புல்லாங்குழல் சொல்லை -- உன்
புருவமான வில்லை -- முத்துப்
பல்லை, இதழை, முகத்தைத் தேடிப்
பார்த்தேன் இல்லை -- பட்டேன் தொல்லை.
இன்பமான நிலவு -- நீ
என்னைப்பற்றி உலவு -- நான்
துன்பப்பட்ட நேரமெல்லாம்
தொலைந்தது பார்; கொஞ்சிக் குலவு!
நேற்றுவந்தேன் இல்லையே -- நீ
இல்லையே!
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
