கொள்ளுப்பேரன் சொத்து
கொள்ளுப்பேரனுக்கும்
சொத்து சேர்க்க எண்ணிக்
கோவணம் கட்டி உழைத்து
உழைத்து வயல்
வாங்கிப்போட்டார் தாத்தா .
நெல் விளையும் வயலை,
தூரோடு தூர்த்துவிட்டு ,
கிரானைட்டு வெட்டி,
பணம் பார்த்தார் அப்பா.
இடமோ பாதாளமானது .
அதிரடி சோதனையில்
அத்தனையும் சீல் வைப்பு.
யானைகட்டிப் போரடித்த
கழனி இப்போது உதவாத
கல்லுக் குட்டை.
கொள்ளுப்பேரனுக்கு
கொள் விளையவும்
மண் இல்லை.
கொண்டிடவும் சோறில்லை ,
கல்லுடைத்து வயிர் கழுவ
கல்லும் இல்லை .
'தாத்தா சாமியாக கல்லாக '
இப்போதும் மூலையில்!