தனிமையில் நான்...
கண்ணீருக்கு ஆசைப்பட்டு நான் பிறந்தேனோ...
காலமெல்லாம் ரத்தம்சிந்த ஏன் பிறந்தேனோ..
தத்தெடுத்த பிள்ளையாக நான் வளர்ந்தேனோ...
தனிமைதான் சொந்தமென வளர்ந்து வந்தேனோ...
பெற்றபிள்ளை வேண்டாமென.....
குப்பைதொட்டியில் வீசும்தாயை...
பெற்றவளும் பெண்ணென்றால்....
உண்மை இல்லையே....
என்னை தத்தெடுத்து...
வளர்த்ததாய்க்கு நன்றிசொல்லஆசைப்பட்டேன்...
அவளும் இப்போ.....
இங்கே இல்லையே....
தனிமையிலே நானிருந்து...
தவிக்கின்ற போதிலும்...
தனக்கென ஒருசொந்தம்....
இவ்வுலகில் இல்லையே....
((( ஒரு அநாதை தோழியின் கதை....)))