கணினிப்போரின் கடைசிச் செதில்.....

வெற்றுக்கால்
கெஞ்சியழுகிறது
ஈர மணல்
தீண்டல்களுக்காய்....
தோலுறை தரித்த
பாதங்களோடு.....

திறந்த வீதிகளில்
திரிந்து ததும்பும்
தாவணி வனப்புகள்
பெண்ணியம் மட்டுமே
போர்த்திக் கொண்டு.....

மாவடைத்த மூட்டைகளும்
காற்றடைத்த குப்பிகளுமாய்
கலந்து வறண்டு
போயிருக்கிறது என்
எலும்பிடை இரத்த ஊற்று.....

ஏணிப்படிகள் ஏற்றுப்
படிகளாய் பரிணமித்து
வளர்த்து நிறைக்கிறது
கொழுப்புத்
திசுக்களை.....

வியர்வைச்சுரப்பிகள்
புதைத்தேறி
விஷக்குளிர் தெறிக்கத்
துப்பும்
எந்திரச்சைத்தான்கள்....

மென்கம்பி அதிர்விசையாய்
மனம் நிறைந்த
உணர்வுகள் புழுங்கி
மடிகிறது வெறும்
சலவைத்தாள்
சாட்டையடிகளோடு.......

எழுதியவர் : சரவணா (7-Jan-13, 11:10 am)
பார்வை : 140

மேலே