உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே... (பொங்கல் கவிதை போட்டி)
வறண்ட காவிரியும்
வராத மின்சாரமும்
தொடர்ந்து துன்புருந்த
கோவணமும் அடகு கடையில்
கெஞ்சி கூத்தாடியும்
கிடைக்காத தண்ணீரால்
கஞ்சி தொட்டியில்
கை ஏந்தி நிற்கும் அவலம்
நெல் களஞ்சியத்தில்
அலச்சியம் காட்டுவதால்
தஞ்சை தரிசாய் போக
பஞ்சம் பரிசாய் கிடைக்கும்
மரங்களை வெட்டி மழையை துரத்தி
கட்டிடம் பல கட்டி-பருவ காற்றினை
பக்கம் வராமல் செய்துவிட்டோம்
தினசரி நாளிதழ்களில் தினம் ஒரு
விவசாயி தற்கொலை கொசுறு செய்தியாய்
அறிக்கை விடும் அரசு
பருக்கை அளவு அக்கறை காட்டினால்
இயற்கையோடு போராட
கலப்பையோடு கடைசி உழவன் மீதபடுவான்
இன்று தோற்ற நிலையில் விவசாயம்
வென்ற தொழில்கள் வேதனை கொள்ளும்
கைப்பிடி உணவிற்கு கையேந்தும் போது...