தைமகளே வருக...(பொங்கல் கவிதை போட்டி)

முளைத்த நாற்றும் முற்றிய கதிரும்
நா வற்றி கிடக்க
மாவிலை நீர் தெளித்து போக வாராயோ.?.

குடிசை கடனும் குடித்த விசமும்
தொண்டைக் குழியில் இறங்க மறுக்க
வரவேற்பரையில் நீ வந்து நிற்கிறாய்

வராமல் போன காவிரியால்
பதராய் கதிரும் போனதனால்
பச்சரிசிக்கு வழியின்றி
தவிச்சு கொதிக்கிறது பொங்கல் பானை

நட்ட கரும்பும் நாலு முலத்தில் கருகி நிற்க
வித்த (உழுத) உழவு மாடும்
விதி சொல்லி சாணம் மிதிக்கிறது

உழவர் திருநாள் உழவனின் உழைப்பிற்கு
ஒருநாள் விடுமுறை வாங்கி தந்த உனக்கு
எங்கள் வங்கி கடன் தெரியுமா?

அரசியல்வாதி போல் ஆண்டுக்கொருமுறை
நீயும் வந்து போகிறாய்
முப்போகம் விளையுமுனு
பழங்கதை சொல்லி பிரிகிறாய்

உன்னை சொல்லியும் குற்றமில்லை
வரவேற்ப்பில் நாங்களும் குறைவைப்பதில்லை
வந்தோரை வரவேற்ப்பது தமிழர் பண்பாடு
“”””””தை மகளே வருக””””””

எழுதியவர் : பாலமுதன் ஆ (7-Jan-13, 5:29 pm)
பார்வை : 160

மேலே