உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே... (பொங்கல் கவிதை போட்டி)
![](https://eluthu.com/images/loading.gif)
அநீதியும் அக்கிரமமும் அரங்கேறி
அண்டத்தை ஆளுகையில் அழாமல்
ஆகாசவாணி ஆழ்ந்து உறங்கிவிட்டாள்
ஆகையால் பருவமழை பொய்த்து
உழவும் உழவனுமின்றி ஊழியே
மரணத்தின் விளிம்பில் ...
உலகம் செழித்து ஊன் வளர்ந்திட
அச்சாரம் போட்டு அதிகார
ஆட்சி செய்யும் அரசே -உன்
அரசியல் பீடமது அழியாமல்
ஆக்கவல்ல உழவையும் உழவனின்
ஆணிவேரையும் உற்று நோக்கு ...
உனக்காய் உழைத்து உழைத்து
ஓடாய் தேய்ந்துப் போன
உழவனின் நிலையதை சற்று
உறக்கத்திலாவது சிந்தனை செய்.
இயற்கைத்தாய் ஈன்றெடுத்த சேயை,
ஆறாய்ப் பிறந்த அக்காவேரிப்பெண்ணை
அழைத்துவரும் அதிகாரம் உன்னிடம் இருக்கையில் எதற்காக அமைதிகொள்கிறாய்?
உழவனுயிர் உன்னாட்சிக்குக் காணிக்கையோ ?
இயற்கை ,இறையின்கோபம் தீரும்வரை
இரையதை தந்திடும் உழவைக்காக்க
இறையாண்மையே இரங்கியருள் புரிந்திடு......