உழவும் உழவனும் மரணத்தின் விழிம்பிலே...(( பொங்கல் கவிதைப் போட்டி..))

உழவும் உழவனும் மரணத்தின் விழிம்பிலே...(( பொங்கல் கவிதைப் போட்டி..))

பசிய தீர்க்க பாடுபடும் விவசாயி...
அவன் பசியபோக்க வழியிலையே என்னதாயி...

பட்டினியா கிடந்தது தானே பாடுபட்டான்...
பிறர் பட்டினிய போக்கதானே கஷ்ட்டப்பட்டான்..

பயிர் எல்லாம் வாடுதுன்னு துடுச்சுநின்னான்..
அவன் காவிரியில் நீரத்தர மருத்துப்புட்டான்...

மழைய நம்பி விதயமண்ணில் விதச்சுப்புட்டான்...
மழையும் இப்ப பெய்யலன்னு கலங்கிநின்னான்...

வயலுக்கு நீர்இறைக்க நமக்கு வழியிலையே...,
அரசு மின்சாரத்த எடுத்துத்தர நினைக்கலயே....

பாட்டன் செஞ்ச கலப்பையத் தேடி....
கரையான் கூட்டம் குடும்பத்தோட வந்துருச்சு..

பச்சப் புள்ள வயிறு கூட...
பட்டினி கிடந்தது பழகிப் போச்சு...

உழவு மாடு ரெண்டும் இப்ப...
உணவில்லாம உடம்பு வத்திப் போயிருச்சு...

உண்ண உணவு இல்லையின்னு விவசாயி...
உயிரை விடப் போறானே என்னதாயி....

மண்ணையும், மணலையும் தின்னு தானே...
குழந்தை சாப்பிட பழகுச்சு உண்மைதானே...

விவசாயம் செய்ய வழி இல்லையின்னா..
விதியென்று நீ சொல்ல வேண்டாம்...

மதிகெட்ட மானிடரை விட்டு தானே...
விவசாயம் மரணத்தை தேடி போகனுமா...?

எழுதியவர் : சிறகு... (8-Jan-13, 11:53 am)
பார்வை : 229

மேலே