உழவனும் உழவும் மரணத்தின் விளிம்பில்.....(பொங்கல் கவிதை போட்டி)

விளைச்சல் நிலங்களில் செழிப்பாகவே
வளர்ந்து கொண்டிருக்கின்றன.....
அதிகமாக அடுக்குமாடிகள் !
****************************************************************************
நாற்றுநடும் வயல்களெல்லாம் மெதுவாய்
உருவம் மாற்றிப் போகிறது....
மழையின்றி தரிசுநிலங்களாய் !
****************************************************************************
நாற்றுநடும் நேரத்தில் அழைத்தாலும் வராமல்
அறுவடை நேரத்தில் அழையாவிருந்தாளியாய் வந்து
அறுவடை செய்துவிட்டுப் போகிறது.....மழை
உழவனின் கண்ணீரை மட்டும் !
****************************************************************************
ஏர்கலப்பைகள் இன்று
ஏதோஒரு மூலையில் முடங்கிக்கிடக்கிறது.....
ஏர்பிடித்து உழுதவன் கரங்களில்
ஏமாற்றமே மிஞ்சிருக்கிறது.....
பசிதான் வயிற்றில் எஞ்சிருக்கிறது....
****************************************************************************ஐம்பூதங்களும் அனைவருக்கும் பொதுவானதாமே...
நம் அண்டைமாநிலம் மட்டும் ஏன்
தண்ணீரை தனதென தரமறுக்கிறது....?
உழவனின் வயிற்றில் அடிக்கிறது....?
****************************************************************************
இந்நிலை தொடர்ந்தால்....அழிவது
உழவும் உழவனும் மட்டுமன்று...?
உணவின்றி உலகும் தான் !
****************************************************************************

எழுதியவர் : அருண்குமார்.அ (8-Jan-13, 11:51 am)
பார்வை : 170

மேலே