உதவி செய்யலாமே

ஈரோடை சேர்ந்த மில்லில் வேலை பார்க்கும் சாதாரண தொழிலாளியின் மகன் சிவசங்கர். தாயார் லதா குடும்பத்தலைவி இவர்களுக்கு ஒரே மகன் தான் சிவசங்கர், வேறு பிள்ளைகள் கிடையாது. எட்டாம் வகுப்பு தேர்வெழுதி விடுமுறையில் இருந்த சிவசங்கரன் எல்லோரைப்ப்போலவே மகிழ்ச்சியோடு 9 ஆம் வகுப்பு செல்லும் கனவில் சந்தோஷமாக இருந்துவந்தவேலையில் தான் கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக கையில் வீக்கம் எர்ப்பட்டதன் பேரில் கோவை கொங்கு நாடு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள், அங்கு எல்லா சோதனைகளையும் செய்த மருத்துவர்கள் சிறுவனுக்கு ரத்தத்தில் புற்று நோய் இருப்பதாக கண்டுபிடித்து பெற்றோர்களின் உள்ளத்தில் இடியை இறக்கினர்,
(இச்செய்தியை கேட்ட உடன் சிவசங்கரின் தந்தை ரத்தக் கொதிப்பு அதிகமாகி உடல் நலம் பாதிக்கப்பட்டு கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்,)
அதுகொண்டு உடனடியாக சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை செல்லுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்ததன் பேரில் கடந்தவாரம் சென்னை புற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான் சிறுவன் சிவசங்கர், சோதனைகள் செய்த மருத்துவர்கள் குழு ரத்தப் புற்றுநோய் தீவிரமடைந்து காணப்படுவதாகவும் பலமான வீரியமான சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் சிகிச்சையின் பொழுது உயிருக்கு ஆபத்து ஏற்படவும் 60 % வாய்ப்புகள் இருப்பதாகவும் சிகிச்சையின் பொழுது குறைந்த பட்சம் 30 நாட்களுக்கு தினமும் இரண்டு யூனிட் இரத்தம் தேவைப்படுவதாகவும் சொல்லி விட்டனர் அதிலும் குறிப்பாக இரத்தில் உள்ள பிலேட்டலேட் (PLATTELET) மட்டும் தேவைப்படுவதாகவும் தெரிவித்து விட்டனர் தற்போது நான்கு நாட்கள் இரத்தம் தெரிந்தவர்கள் மூலம் கொடுத்தாகி விட்டது நாளை முதல் இன்னும் 26 நாட்களுக்கு இரத்தம் தேவைப்படுகிறது சிவசங்கர் இரத்த வகை O பாசிடிவ் + , இருப்பினும் எந்த வகை ரத்தம் உள்ளவர்கள் வந்து கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொண்டு PLATTELETE மட்டும் எடுத்துக் கொள்வதாக மருத்துவமனை இரத்த வங்கியில் தெரிவிக்கிறார்கள்,
(ஆண்கள் ரத்தம் மட்டுமே PLATTELETE COUNTING போதுமானதாக இருக்கும் எனவே ஆண்கள் இரத்தம் மட்டுமே எற்றுக்கொள்ளப்ப்படுமாம்)
எனவே தயவு செய்து இரத்த தானம் அளிக்க முன்வரும் நண்பர்கள் உடனடியாக அடையாறு கேன்சர் மருத்துவமனை சென்று MOP வார்டில் 9 ஆம் நம்பர் படுக்கையில் உள்ள சிவசங்கரன் என்று சொன்னால் உடனடியாக உங்களை அழைத்து சென்று இரத்தம் பெற்றுக் கொள்வார்கள், அல்லது எனது மொபைல் நம்பருக்கு அழைத்தால் நான் தங்களை வழி நடத்தி ரத்தம் பெற்றுக் கொள்ள வழி செய்கிறேன் அல்லது அந்த சிறுவனின் தாயார் லதா அவர்களை அழைத்தால் அவர்களும் தங்களுக்கு ரத்தம் அளிக்க உதவுவார்கள்.

இந்த செய்தியை நமக்கு கொண்டு வந்து சேர்த்த அன்பு சகோதரிக்கு ( Kayalvizhi Lakshman )எனது மனமார்ந்த பாராட்டுகள், அதோடு இல்லாமல் மருத்துவமனைக்கு வந்திருந்து சிறுவனையும் அவரது தாயாரையும் பார்த்து ஆறுதல் சொல்லி ரத்தம் பெறுவதற்காக என்னென்ன வழிமுறைகள் எல்லாம் உண்டோ அத்தனை வகையிலும் இப்போது வரை சிரமம் எடுத்து உதவிக்கொண்டிருப்பதர்க்கு எனது மனமார்ந்த நன்றி..


சிறுவனின் தாயார் நம்பர்: 9952640297

எழுதியவர் : (8-Jan-13, 1:45 pm)
பார்வை : 348

மேலே