உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே... (பொங்கல் கவிதை போட்டி)

போகியிலே தூக்கிபோட பழைய துணியும் இல்ல,
தைமகள வரவேற்க வண்ண உடையும் இல்ல...

வான பார்த்த பூமி இன்று விரிசல் விட்டு கிடக்குதடா ,
வழி தவறும் ஆடும் கூட உள்ள நுழைய மறக்குதடா..

என்னோட உசுரு(நிலம்) வீனா கிடக்குதடா,
பார்க்க பார்க்க எந்தன் நெஞ்சு வலிக்குதடா...

நிலம் மீது வீடு,
மீதி சுடுகாடு..

போதுமடா! போதுமடா! போதுமடா! சாமி...
உணவு இன்றி மனிதன் வாழ மாற்று வழி காமி...

மாடுழவும் சத்தம்,
மலை குருவி முத்தம்,
நெல்அசையும் காட்சி,
இவை எங்கு இன்று போச்சு...

போதுமடா! போதுமடா! போதுமடா! சாமி...
பூமியிலே பயிர் விளையும் இடம் இருந்தா காமி...

மரணம் எந்தன் பக்கம் வந்து நிற்குதடா,
விவசாயம் விதவையாகி கிடக்குதடா...

எழுதியவர் : பாலாஜி (8-Jan-13, 3:28 pm)
பார்வை : 108

மேலே