!!!===(தோழமைகளே...! பொங்கல் கவிதை போட்டி)===!!!

எழுத்து தோழமை சொந்தங்களே...

பொங்கல் திருவிழா கவிதை போட்டி வெற்றிகரமாக எட்டு தினங்களாக நடந்துகொண்டு இருக்கிறது, நீங்களும் திருவிழா குழுவிற்கு மிகுந்த ஆதரவை அளித்து ஊக்கப்படுத்திக்கொண்டு இருக்கிறீர்கள், உங்கள் படைப்புகளை தொடர்ந்து பதிவு செய்துகொண்டு இருக்கிறீர்கள், நீங்கள் அளித்துவரும் மேலான ஆதரவிற்கு திருவிழா குழுவின் சார்பாக நன்றியினை தெரிவித்துகொள்கிறோம்.

அன்பு தோழர்களே பரிசையும் தாண்டி இந்த அறுவடை திருநாளில் நமது தாய்மொழியை கவிதைகளால் செம்மைபடுத்தி உங்கள் திறனை வெளிபடுத்திகொண்டு இருக்கிறீர்கள், நீங்கள் பதிவு செய்யும் கவிதைகளை ''கவிதை சேகரிப்பு குழு'' தொடர்ந்து தளத்தில் பார்வையிட்டு பதிவாகும் அனைத்து கவிதைகளையும் போட்டி ஒருங்கிணைப்பு ஆணையத்திடம் சமர்பித்துகொண்டு இருக்கிறார்கள், 11 ஆம் தேதி போட்டி ஒருங்கிணைப்பு ஆணையம் நடுவர் குழுக்களிடம் உங்கள் மொத்த படைப்புகளையும் சமர்பிக்க உள்ளது, நடுவர்களின் தேர்விற்கு பிறகு வென்றவர்களின் இறுதி அறிவிப்பு பதினைந்தாம் தேதி வெளியாகும் என்பதை தெரிவித்துகொள்கிறோம்.

இன்னும் இரண்டு நாட்கள்தான் உள்ளன உடனே உங்கள் போட்டிக்கான படைப்புகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுகொள்கிறோம்.

நன்றிகளுடன்
திருவிழாக் குழு

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (8-Jan-13, 5:25 pm)
பார்வை : 86

மேலே