என்னையே செதுக்குகிறேன்
நான் கவிதை
எழுதத் தொடங்கிய
நாள் முதல்....
என் மேல்
கற்கள் வீசப்பட்டு கொண்டுதான்
இருக்கின்றன --- அவை
என்னை காயப்படுத்துவதாக
நினைக்கவில்லை!
என்னை செதுக்கும் உளியாய்
உணர்கிறேன்!
மேலும் மேலும் செதுக்கி...
எனக்குள்ளிருக்கும்
உயிரோட்டத்தை ....
என் வரிகளில்
கொண்டு வருகின்றனவே !
----வெண்ணிலா-----