நகைச் சுவைதானோ?

ஒன்று வாங்கினால்
இன்னொன்று இலவசம்
என்று சொல்லியே
விளம்பரம் செய்வர்.
கொழுக்கு மொழுக்கென
மின்னிடும் கன்னம்
கொண்ட குழந்தைகள்
இரண்டுக்கு ஆங்கே
ஒரே மாதிரி
சட்டை போட்டு
ஒன்று வாங்கினால்
என்று ஒன்றிலும்
மற்றது இலவசம்
என மற்றதிலும்
போட்டு படத்தை
இணைய தளத்தில்
பரப்பிய சுவையது
நகைச் சுவைதானோ?

எழுதியவர் : தா. ஜோசப் ஜூலியஸ் (8-Jan-13, 4:59 pm)
சேர்த்தது : T. Joseph Julius
பார்வை : 67

மேலே