என்ன தவறு செய்தாய் தோழியே.....

நாடு திருந்தி விட்டதென...
நடந்தனையோ
நள்ளிரவில்....
நண்பனுடன்.....
நாய்களுக்கு இரையாவதற்கு...?

என்ன தவறு செய்தாயோ நீ.....
இந்தியாவில் பிறப்பதற்கு.....

தூணுக்கு சேலை கட்டினும்...
அதை உருவிப் பார்க்கும் ..
கீழ்மகன்கள்.........
இல்லையென்றா நினைத்திட்டாய்....

என்ன தவறு செய்திட்டாய் தோழியே....?
2020-ன் இலட்சியங்கள் அறியாயோ......
பிறக்கின்ற குழந்தைக்கு
பாலுக்கு பதிலாக......
பாட்டில்கள் கொடுக்க வேண்டும்....

சத்துணவில் பீரும்
இடம் பெற வேண்டும்...

அதிகம் குடிப்போர்க்கே
வேலை வாய்ப்பில் முன்னுரிமை.....

அதிக மது வாங்கும் குடும்பத்துக்கு
மத்திய மாநில விருதுகள்....என....

பறந்தபடி இருக்கும்....
பாரதத்தை பார்க்க....
மனமின்றி முடிந்தனையோ....?

உண்மையை சொல்கிறேன் தோழி...
வெட்கத்தோடு தலை குனிந்து....
கலங்கும் கண்களோடு...

கற்பழிப்பிற்கு கடும் சட்டங்கள்
கொண்டு வந்தால் ....
உன் போல் யார்க்கும்
நேராது என்பது அறிவீனம்.....

பூரண மதுவிலக்கும்.....
மது அருந்துதலே
கொடிய குற்றமென....
கொடுந்தண்டனையும்....என...
சட்டங்கள் வந்தாலன்றி....
யாருக்கும் பயனில்லை
என்பதே தெளிவினம்...

மதுவின் ஒழிப்பினிலே தான்
மாதுவிற்கு ஒளி கிடைக்கும்.....
அதற்காக என் கவிதையின்
குரல் ஒலித்த படியே இருக்கும்.....

எழுதியவர் : (8-Jan-13, 4:54 pm)
சேர்த்தது : krishnamurthy
பார்வை : 84

மேலே