தை மகளே வருக (பொங்கல் கவிதைப்போட்டி)

வா தைமகளே வா
பொறாமை தீயகற்றி
மக்களிடையே
பொறுமையை போதிக்க வா
சாதிமத பொருளாதார
வேறுபாடகற்றி
சமூக நீதியை சாதிக்க வா

திரைத் துறையினரின்
தேனொழுகும் வணிக வார்த்தைகளில்
மூழ்கிக்கிடப்பவரை
விழிக்க வைக்க வா
உழைப்பை மட்டும் நம்பும்
உன்னத மனிதர்களின் வாழ்வை
செழிக்க வைக்க வா

தன்னிகரில்லா தலைவரை
அடையாளம் காட்ட வா
தன்மானம் பேணுவோருக்கு
நெஞ்சுரம் ஊட்ட வா

பண்பாட்டின் அவசியத்தை
இளைஞர்களும் உணரச்செய்ய வா
பசியில்லா சமுதாயத்தை
உலகெங்கும் மலரச்செய்ய வா..
… …

எழுதியவர் : புதுவை வெ. செந்தில் (9-Jan-13, 11:32 am)
பார்வை : 139

மேலே