எங்கே போனது எனது குயில்....

மாடிகள் வளர்கின்றது.....
மரங்களைக் காணோம்.....
மரத்தில் குடியிருந்த....
கருங்குயிலைக் காணோம்......................................!

கறுப்புப் பேரழகி...
காக்கையின் நகலழகி...
கண்ணில் படாமல்போனாலே...
இன்னிசைக் குரலழகி...............................................!

என்னைக் கவிககுயிலாக்கினளே......
அந்தக் கருப்பழகி.....
எங்கே போனாலோ....
என் கனவழகி.............................................................!

கருங்குயில் உனைநான்....
தேடினேன் காட்டினில்.....
இதுவரைக் காணாததால்....
வாடினேன் சூட்டினில்...............................................!

உள்ளுக்குள்ள ஒருஆசை...
உன்னைப் பார்க்க....
உன்னைவிட்டால் என்னயிருக்கு....
இந்த நாட்டில்..............................................................?

காக்கையின்கூட்டில் முட்டையிட்டு...
கருத்தாய்சேயைப் பெற்றெடுத்தாய்...
காதல்செய்து கவிவடித்தேன்...
காணாமல்ஏன் விட்டுச்சென்றாய்.........................?

காலத்தின் வேதனை.....
என்ன செய்வேன்...
மரம் காகிதமானதை.....
எப்படிச் சொல்வேன்................................................?

மரம்வளர்க்க ஆளில்லையே...
இந்த நாட்டில்...
காட்டிற்கு கொள்ளிவச்சானே...
மனிதன் சுடுகாட்டில்...............................................!

உனக்காக மரம்வளர்க்க....
உயிரோடு நானிருக்க...
ஓடிவர மாட்டாயோ....
என்னாசைக் கருங்குயிலே....................................!

((( ஒரு கருங்குயிலைத்தேடி இந்த கவிக்குயில்......................சிறகு))).

எழுதியவர் : சிறகு... (9-Jan-13, 1:32 pm)
பார்வை : 294

மேலே