தை மகளே வருகவருக

சுழலும் புவிஅன்னை
கதிரவனைச் சுற்றி வந்து
கதிர் பெற்று ,நித்தமும்
பிள்ளைகள் நமக் குணவூட்டும்.

சுற்றில் வடக்கு முடித்து
தென்திசை திரும்பும்
உனக்கிது முதல் நாள்
தைமகளே...வருக!....வருக!

ஆடிபார்த்து விதைவிதைத்து
புதுப்புனலில் வயல் நிறைத்துப்
பயிர் வளர்த்து கதிரறுத்து
புதுப்பானை புதுஅரிசி

புதுப்பொங்கல் வைத்து
கதிரவனுக்குப் படைக்கும்
இந்நாள் தை மகளே ....
நீ வருக! வருக!.

முதற்கடவுள் வாகனமாய்,
காக்கும்கடவுள் மேய்ப்பன் ஆக
முன்னோர் தந்த ஆவினங்களை
காவுக்கு விற்று விட்டு

எந்திரத்தில் கழனி வேலை,
காலத்தின் நிர்பந்தம்
கலங்காதே தை மகளே ..
நீ வருக! வருக !

வான் மழையோ காற்பகுதி ,
பூம்புனலோ அதிற்பாதி,
விளை நிலமோ கட்டிடமாய் .

இயற்கை உரம் இங்கில்லை
பூச்சிகளோ பெருந்தொல்லை .

அடர்ந்த ரசாயனம் உரமாக,
மருந்தாக ,அரிசியிலும்
சிறிதே நஞ்சுண்டு.

அதற்காக வருந்தாதே
நீ வந்தால் வழிபிறக்கும்
தைமகளே வருக!.....வருக!

எழுதியவர் : Minkavi (9-Jan-13, 2:29 pm)
பார்வை : 1279

மேலே