உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே !!! (பொங்கல் கவிதை போட்டி)

வானம் பார்த்து
விளைஞ்ச மண்ணும்
வீணாத்தான் கிடக்குதே !!!
தங்கமா கொழிச்ச
நிலமும் இங்கே
தரிசாத் தான் ஆனதே !!!
பருவ மழையும்
பொய்யாய்ப் போக
பயிரும் தான் வாடுதே !!!
நிலத்தடி நீரும்
வற்ற - நிலமும்
பாளம் பாளமாய் வெடிக்குதே !!!
விளை நிலங்களனைத்தும்
சுளை சுளையாய் பணமாக
ஹைடெக் கம்பெனிகள் முளைக்குதே !!!
அங்கு அரிசி விளைவிக்க
சாஃப்ட்வேர் தயாரிப்பு
வேலையும் தான் நடக்குதோ ???
ஏரின் பின் சுழன்ற உலகும்
இன்று - எதன் பின் உழலுதோ ?
உண்டி கொடுத்த உழவனும்
துண்டினை தலைக்கிட்டு அமர்ந்திருக்க
உழவும் உழவனும்
மரணத்தின் விளிம்பிலோ ???

எழுதியவர் : பி.தமிழ்முகில் (9-Jan-13, 3:10 pm)
பார்வை : 150

மேலே