சாவு
சாவு என்றாலே பயம் !
அதை புரிந்து கொள்ள
சாகவேண்டியிருக்கிறது !
வேறு எந்த வகையிலும்
புரிந்து கொள்ள முடியாமல் போகிறது !
அதை பற்றிய கற்பனைகள் ஏராளம் ,
சாக விருப்பமில்லாமல் போய்விடுகிறது !
ஒரு பெண்ணை காதலிப்பது போல்
சாவை காதலிக்க முடியவில்லை ! - அதை
உயிரோடிருந்து அனுபவிக்க முடியவில்லை !
சாவை அனுபவித்து பகிர்ந்து கொள்ள
நீயும் நானும் உயிரோடிருக்க வேண்டும் !
அப்படியெனில் சாவில்லை என்றாகிறது !
வாழ்வு என்கிற ஒரு பக்கமும்
மரணம் என்கிற ஒரு பக்கமும்
அதைவிட
வாழ்வில் சாவும்
சாவில் வாழ்வும்
வாழ்ந்து கொண்டே ! மறுபக்கம்
செத்துக்கொண்டே !