யாராவது இதற்குப் பதிலைக் கூறுங்கள்
ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னால்
இயம்பினன் வள்ளுவன் தமிழில்
“சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்”
பதினைந்தாம் நூற்றாண்டில் அதையே
பகர்ந்தனன் கோபர்னிகஸ் என்பவன்
“உலகம் என்பது ஒரு கோளம்
தானும் சுற்றி சூரியனைச் சுற்றும்”
சுழலுது பூமியென சொன்னது முதலில்-வா
சுகியின் கணவனா கோபர்னிகஸா?
கேள்வி இதற்குப் பதிலைத் தேடி
கேட்ட என் தலை சுற்றுகின்றது
அப்பப்பா கண்ணையும் கட்டுது
யாராவது இதற்குப் பதிலைக் கூறுங்கள்.