..........தகனம்.........
உன் மனதுக்குள் இருக்கும்,
கோபங்களெல்லாம் ஒருமுகப்படும்போது,
எதிர்முகமாயிருப்பது என் துரதிஷ்டம் !!
அங்கே எரிமலையாய் வெடிக்கும்,
உனது தீக்குழம்பு வாரத்தைகளில் சுருண்டு,
துரும்பாகி வெந்து வேகாலத்தில் சிதைந்து,
கருகி கரிக்கட்டையாய் சுடுகாடு போகிறேன் நான் !!