உழவின்றி உலகில்லை (பொங்கல் கவிதைப் போட்டி)
உழவின்றி உலகில்லை
(பொங்கல் கவிதைப் போட்டி)
உழவு என்றால் என்ன என்றாள் என் நான்கு வயது பெண்,
எப்படி சொல்வது என்று புரியாமல் நான்.
ஏன்னெனில் நான் இருக்குமிடத்தில் கண்ணுக்கெட்டிய தூரம்வரை கான்கிரீட் கட்டிடக்குவியல்,
பேச்சுக்கூட இல்லை கூரைவீட்டின் சாயல்,
ஆங்காங்கே நட்டுவைத்த மரம்,
பசுமை என்ற சொல்லுக்கு அவையே ஆதாரம்.
இப்படியே போனால் என்னவாகும் அடுத்த தலைமுறை,
உழவும், உயிரும் இருக்குமா அதுவரை.
இந்நிலையில் என்னவென்று சொல்வேன் உழவை,
சற்று யோசித்து சொல்ல ஆரம்பித்தேன் உழவின் அழகை.
பெண்ணே, நாம் சாப்பிடும் அரிசி, பருப்பு, காய்கனி எல்லாம் தருவது உழவுதான்,
உழவுசெய்ய தேவைப்படுவது புன்செய் நிலம்தான்.
ஏர் உழுது, விதை விதைத்து, களைபிடுங்கி, நீர் பாய்ச்சி, பயிர் செழிக்க உழவன் பாடுபடுவான்,
என்னதான் பாடுபட்டாலும் வறுமையிலதான் அவன் வாடுவான்.
அதனால பலரும் கைவிட்டாங்க உழவை,
பணம் நிறைய சம்பாதிக்க செஞ்சாங்க ரியல் எஸ்டேட் எனும் எழவை.
உழவுசெய்ய வேனும் நிலம் – அதை கண்ணால பாக்க
நீ போகவேணும் பல மைல் தூரம்.
இதை கேட்ட என் பொண்ணு - கவலபடாதீங்கப்பா, பெரியவளா ஆனதும் நான் செய்யறேன் உழவு,
இன்றிலிருந்து அதுதான் என் கனவு.
இடம் கிடைக்கலைன்னாலும் உழவைச்செய்கிறேன் நம்பவீட்டு மாடியில,
அவ பேசினத கேட்டதும் எனக்கு தலை-கால் புரியல.
பெண்ணின் வார்த்தையால் உழவு செழிக்கும் என்கிற நம்பிக்கை,
இனி அடுத்த தலைமுறைக்கும் உண்டு நல்ல உணவு-வாழ்க்கை.
உழவையும், உழவனையும் மதிப்போம்,
உயிரையும், உலகையும் வளர்ப்போம்.