திருவருட்பிரகாச வள்ளலாரின் அமுதகானம்

1. பூரணராய் உனக்குள் உள்ளேன். தன்னிறைவுத்தன்மை உனக்குத் தந்தேன்.

2. சுயம்பிரகாசராய் உனக்குள் உள்ளேன். சத் தர்ஷனமென்னும் தூய நோக்கை உனக்குத் தந்தேன்.

3. பேருண்மையாளராய் நித்தியராய் உனக்குள் உள்ளேன். நித்திய ஜீவனை உனக்குத் தந்தேன்.

4. அமிழ்தானந்தராய் உனக்குள் உள்ளேன். ஆன்மநேய ஒருமை உனக்குத் தந்தேன்.

5. பேரன்பராய்ப் பேரருளாளராய் உனக்குள் உள்ளேன். என் இயல்பையே உனக்குத் தந்தேன்.

6. பேரறிஞராய்ப் பேரறிவாளராய் உனக்குள் உள்ளேன். என் நிறைவையே உனக்குத் தந்தேன்.

7. அருட்பெருவல்லபராம் சத்தியராய்ச் சத்தராய் சித்தியராயச் சித்தராய்ப் பூரணானந்தராய் உனக்குள் உள்ளேன். என் தயைச் செறிவையே உனக்குத் தந்தேன்.

8. பெருங்குண தயாளராய் உனக்குள் உள்ளேன். ஒருமை இறைநிலையாம் தனிப்பெருங்கருணை உனக்குத் தந்தேன்.

9. உள்ளொளி ஜோதியராய் உனக்குள் உள்ளேன். ஒருமை ஒளிநெறியாம் அருட்பெருஞ்ஜோதியை உனக்குத் தந்தேன்.

10. பெருநிலைக்கடவுளாய் உனக்குள் உள்ளேன். ஒருமை உயிரியலாம் கடவுட்தன்மை உனக்குத் தந்தேன்.

11. அருட்பேரரசராய் உனக்குள் உள்ளேன். என் அவதார மகிமை உனக்குத் தந்தேன்.

12. நானே நானெனும் பூரணமாய் உனக்குள் உள்ளேன். எனதெல்லா நலங்களோடும் வளங்களோடும் என்னையே உனக்குத் தந்தேன்.

13. மெய்வழிப்பிராண நாதராய் உனக்குள் உள்ளேன். உன் வழியாக என் மெய் விளங்க என் ஜீவனையே உனக்குத் தந்தேன்.
திருஅருட்பிரகாச வள்ளலாராய் உனக்குள் உள்ளேன். சாகாக் கல்வியை உனக்குத் தந்தேன்.
அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் உள்ளேன். நானே நீயாக நீயே நானாக ஒருமைப் பெருநிலையில் ஓங்கி நின்று எல்லா உயிர்களும் இன்புற்று வாழ என்னையே அன்னை பூமிக்குத் தந்தேன்.

எழுதியவர் : நான் நாகரா(ந. நாகராஜன்) (10-Jan-13, 11:03 am)
சேர்த்தது : Natarajan Nagarajan
பார்வை : 110

மேலே