!!!===(இன்றே கடைசி - பொங்கல் கவிதை போட்டி)===!!!
எழுத்து தோழமை உள்ளங்களே...
பொங்கல் திருவிழா கவிதை போட்டி சீரோடும் சிறப்போடும் நடந்துகொண்டு இருக்கிறது, சிறப்பான ஆதரவை நீங்கள் அளித்துக்கொண்டு இருக்கிறீர்கள், ஆகையால் திருவிழாக்குழுவின் நன்றிகள் என்றென்றும் உங்களுக்கு உரிதாக இருக்கும்.
தோழமைகளே இன்று மாலை 6 மணிவரைதான் உங்களுக்கு போட்டிக்கான கவிதைகளை சமர்பிக்க சமயம் இருக்கிறது, ஆகையால் இன்று மாலை ஆறு மணிக்குள் உங்கள் போட்டிக்கான கவிதை பதிவுகளை விரைந்து பதிவிடுமாடு கேட்டுகொள்கிறோம், இன்று இறுதிநாள் என்பதை கருத்தில்கொண்டு உங்கள் படைப்புகளை உடனே பதிவிடுமாறு கேட்டுகொள்கிறோம்,
வழக்கம்போல் கவிதை சேகரிப்பு குழு தளத்தில் உங்கள் அனைத்து கவிதைகளையும் சேகரித்து திருவிழாக்குழு ஒருங்கிணைப்பு ஆணையத்திடம் அளிக்க உள்ளது, ஒருங்கிணைப்பு ஆணையம் நடுவற்குழுக்களுக்களிடம் சமர்ப்பிக்கும், நடுவர்களின் தேர்வுகளுக்கு பிறகு பதினைந்தாம் தேதி இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டு சிறந்த படைப்புகளுக்கு மகுடம் சூட்டி பரிசுகள் வழங்கப்படும் என்று திருவிழாக்குழு தெரிவித்துக்கொள்கிறது.
இன்றே கடைசி நாள் உடனே உங்கள் பதிவுகளை பதிவிடுங்கள்,
தோழமைகள் அனைவருக்கும் திருவிழாக்குழுவின் சார்பாக இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
குறிப்பு;
இன்று மாலை ஆறு மணிக்கு மேல் பதிவிடப்படும் கவிதைகள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படாது, 6 மணிக்கு முன்பே பதிவிடுமாறு கேட்டுகொள்கிறோம்.
தொடர்ந்து இணைந்திருங்கள் தோழமைகளே...
நன்றிகள்
திருவிழாக்குழு