உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே... (பொங்கல் கவிதை போட்டி)

உயிருக்கு வித்திட்ட உழவும் உழவனும் அன்று !
ஊற்றைக் கண்ணால் காண முடியாத எறும்பானான் இன்று

தங்கப் போர்வை போற்றிய கழனி அன்று
கிழிந்த போர்வை போற்றிய கழனியாய் இன்று !

வானம் பார்த்த பூமியோ இன்று
மனம் நலம் பாதித்த மனிதனின் உடை போல இன்று !

உழவனின் வாழ்வு இன்று
நித்திரையையும் நிம்மதியையும் இழந்து
புகை கண்ட எலியாய் மாறியது !

உழவும் உழவனும் செழுமை கொண்டு நின்றது அன்று
கண்ணீர் கொண்ட மேகத்திற்கு தலை மகனாய் மாறிஉள்ளது இன்று !

உழவனும் நட்சத்திரமும் ஒன்று
வாழும் போதுகுறுக்கீடுகள் தான் அதிகம் !
வாழ்வா ? சாவா? என்று ........

முதல் படியாய்
இறைவனுக்கு படைக்க வேண்டிய உழவனோ இன்று

முதலும் கடைசியுமான
உயிரையே இறைவனுக்கு படைக்கிறான் இன்று
உழவும் அதனைத் தொடர்ந்து .......

எழுதியவர் : வேல்முருகானந்தன்.சி (10-Jan-13, 1:17 pm)
பார்வை : 105

மேலே