தைமகளே வருக...(பொங்கல் கவிதை போட்டி)
தைமகளே! என் தாயனவளே!!
நின் இருபத்தியாறாம் நாளிலே
எனை ஈன்றெடுத்த பெருமகளே!
தாயை மகன் அழைப்பதோ
தரணியறியா அழைப்பிது
ஈன்றபொழுதின் பெரிதுவக்கும் தன்மகனை
சான்றோன் என கேட்ட தாய்
என்போர் பெரியோர்.
மரணிக்கும் தருணமொன்று
எனக்கு உண்டெனினும்,
சான்றோரே போற்றும் எனது தாய்க்கு மகனாக பிறந்தது என்பாக்யமே! தாயே!! தரணியே கொண்டாடும் தமிழ் மகளே!!! நின் வருகைக்காய் இவ்வையகமே வாசலெங்கும் சாணமிட்டு
வண்ண வண்ண கோலமிட்டு
புதுப்பானை அடுப்பிலேற்றி
புத்தரிசி பொங்கல்வைத்து
செங்கரும்பு மஞ்சளோடு
சேர்ந்து சொல்லும் தீந்தமிழ்சொல் தைப்பொங்கலோ பொங்கல்
நானும் அழைக்கிறேன் உன்னை
தைமகளே வருக! என் தாயனவளே வருக!!