தை மகளே வருக == (பொங்கல் கவிதை போட்டி)==

தமிழாண்டின் தசைஇயக்க இதய மகளே
உலகின் பெருவாழ்வு கொண்ட முதல்மகளே
பேரிளமை கொண்ட தமிழனின் தலைமகளே
முதல் மொழியாம் தமிழின் உண்ணத மகளே
விருந்தோம்பலை எங்களுக்குள் விதைத்த
வெற்றி திருமகளே வருக! வருக!

கூர்நுனி மாஇலைகொண்டு தோரணம் கட்டி
தையல் அரசிலையில் படையல் இட்டு
இருசிற்றிலையும் சிறகு கூட்டிளையும் செம்பருத்தி
மலரோடு மாலை சாத்தி தண்டலையில்
தவழவரும் தாவரதொழிற் சாலைகள் தரும்
தங்கம் பெரும் தமிழ் மகளே வருக

நிலை இயக்கம் நீயேஎன் தைமகளே
நிகழ் எதிரியக்கமமும் நீயேஎன் தைமகளே
உந்தன் நாட்களில்தான் உயிர்பிறக்கும் உழவர்க்கு
உன்னை தொடரும் மற்ற திங்கள்கள்கள் அனைத்தும்
தான் தோன்றிகள் தான்போலும் தமிழர்க்கு
"நல்வருகை" நீ வரும்போது வரவேர்ப்பதெப்படி
வெறும் வார்த்தைகளால்

எங்கள் விளைச்சலை பிரசவிக்கும் தமிழ்மகளே
உழவனின் வேதனைகள் போக்கும் தைமகளே
வியர்வையை வித்தாக்கி விருந்தாக கொடுக்கும்
தை மகளே வருக! வருக!

எழுதியவர் : தமிழ்நேசன் (சுபாஷ்) (10-Jan-13, 1:05 pm)
பார்வை : 150

மேலே