சுட்டாலும் மறக்காது என் நெஞ்சம்

சுட்டாலும் மறக்காது என் நெஞ்சம்
தீயில் இட்டாலும் அழியாது என் காதல்
தொட்டாலே சுடுகின்ற தீ ஜுவாலை
தினம் தொடுகின்றேன் சுடவில்லை காதல் தீ
இரவெல்லாம் குளிருதடி பனி பெய்தால்
கடும் வெயில்கூட குளிருதடி காதலிருந்தால்
இறந்தாலும் அழியாத உயிர்போல
நான் இறந்தாலும் அழியாது என் காதல்
நீ சொல்கின்ற ஒரு வார்த்தை எதிர்பார்த்து
விழிமூடாது காத்திருப்பேன் தினந்தோறும்
தண்ணீரில் நிற்கின்ற மலர்போல
மனம் தள்ளாடி நிற்கிறதே உன்னாலே
யாரோடு நீபேசி சிரித்தாலும்
என்மனம் உன்னோடு தான்செல்லும் பொன்மானே
விளையாத பயிருக்கு வாழ்வேது
காதல் விளைந்தாலும் சேர்கின்ற நாளேது
பூப்போல இருக்கின்ற உன் நெஞ்சை
புயலாக அனுப்பிவைக்க நினைக்காதே
என் கண்ணில் வழிந்தோடும் நீரோடை
அதைதடுத்து அணைக்கட்ட வருவாயோ
இல்லாத உறவுக்கு நீருட்ட
என்னோடு நீ வாழ வருவாயா?

எழுதியவர் : vendraan (12-Jan-13, 12:36 am)
பார்வை : 318

மேலே