பக்தியா? யோகமா ? ஞானமா ?

யோகவான்:
புலம்பி அழுது எதை
கண்டாய் !
எல்லாம் நீயாய்
இருக்கின்றாய்!
உருகி உருகி
எதை கண்டாய் !
உருவமற்றவன்
இறைவன் ஆவான் !
புத்தியோடு
அணுகினால்
பயன் காண்பாய் !
பக்திமான்:
கோயில்கள் எல்லாம்
பொய்யாமோ!
கற்சிலை என்றே
கனைக்கின்றாய்!
இறைவனை நெருங்கும்
வழி இதுவே!
சிவனே உள்ளே
இருகின்றான்!
யோகவான்:
பிண்டத்தில் உள்ளான்
அண்டத்தில் உள்ளான்
உருவச் சிலைதனில்
மட்டும் காண்கிறாய்
நீ !
தேடி தேடி எதை கண்டாய்!
தேகம் தடித்தே
அலைகின்றாய் !
லொடலொட வென்றே
புரியாத பாஷையில்
புலம்புகிறாய் !
மந்திரம் என்றோர்
பெயரிட்டு !
பக்திமான்:
சக்தியாவும்
ஒன்று திரட்டி !
விமானத்தின் வழி அதை
இறக்கி !
கருவறை என்று பெயரிட்டு !
சிலையேனும் சிவனில்
அமுக்கி வைத்து !
ஒலிவிஞ்ஞான அறிவினிலே !
உலக மக்களுக்கோர் வழிகாட்டி !
வழங்கி வந்த தேசமிது -பக்தி
என்ற பெயரினிலே !
யோகவான் :
யோகம் என்றோர்
பெயரினிலே !
யோகம் நூற்றுஎட்டு முறை
வகுத்து !
சுயசிந்தனை என்றோர்
முறையாலே !
ஊனுடம்பு ஆலயம்
என்ற தெளிவமைத்து !
சுதந்திரம் எனும் முறை தந்த
பெருமை யோகத்தினுக்கே
சார்ந்திடும் காண் !
ஞானவான்:
இருவரும் கூறிய
முறை சரியே !
யோகம் என்பது அரைவட்டம் !
பக்தி என்பதும் அரைவட்டம் !
முழுவட்டம் ஆகிட
முயன்றிடுக !
உயர்ஞானம்
தனிலே கரைந்திடுக !