அவனேதான் (யாரிவன் தொடர்ச்சி ..)

யாரிவன் ..??
யாரிவன் என்றேன்
இவன் யாரென
இன்று தெளிந்தேன்..!

அவனேதான்
இவன் என்றேன்
ஆனந்த
அவஸ்தை கண்டேன்..!

பேறு பெற்றேன்
நான் என்று
பெருமிதத்தில்
பிரமித்தேன்..!

கூடு விட்டு
எழுந்தேன் உடனே
குதித்தேன்
கும்பிடழுதேன்..!

பரவசத்திலே
நான் அவன்
பாதம் பற்றி
பணிந்து நின்றேன்..!

( தொடரும் ...)

எழுதியவர் : ஹேயேந்தினி ப்ரியா (12-Jan-13, 12:32 pm)
பார்வை : 160

மேலே