உனக்காக ஒரு கவிதை
உண்மையாய் நேசித்த உள்ளம்
இவையிரண்டும் கூறக் கேட்கையில்
உடைந்து தான் போகிறது
என் இதயம்.....
"பொய் சொல்லாதே"
"நடிக்காதே"
உண்மையின் குரல்
என்றும்
மௌனம் தானடா.....
கண்ணீர் மட்டும்
பேசுகிறது
என் மனம் போட்ட
தடையையும் தாண்டி.....
கண்ணீரும் பொய்யெனக் கூறி
கொன்று விடுவாயோ என்
காதலை என்று அஞ்சி
கடந்து வந்து விட்டேன்
உன்னை இன்று
கடக்க மாட்டேன் உன்
நினைவை என்றும்.....