பொங்கலோ பொங்கல்....

என்னை பாத்து மாதம் சுமந்தால், நான் சாகும் வரை அன்பு செய்கிறாள் தாய்...
என் வாழ்வு முழுவதும் சுமக்கிறார் என் தந்தை..
இருவருக்கும் நானும் என் சகோதரியும் தான்...
என்னை மட்டுமின்றி பல நூறு கோடி உயிரை சுமந்து கொண்டிருகிராயே உன் தேகத்தில்...
உனக்கு என்ன தீங்கு செய்தாலும் திருப்பி அன்பை மட்டும் பொழிகிறாயே...
அனைவர் மீதும் பாகுபாடின்றி உறவு செய்கிறாயே...
கண்டு வியக்கிறேன் நான்...
எப்படி முடிகிறது உன்னால்....
எவ்வளவு தூரம் நடந்தாலும் உன்னை விட்டு செல்ல கூடாது என்பதற்க்காகத்தான் உருண்டையாக இருக்கிறாயா...
உன்னை விட்டு பறந்து சென்றாலும் உன் அன்பால் இழுக்கிறாயே...
நான் இறந்தபின்னும் உன் கருவறையில் சுமக்கிராயே...
பூமியே..... உன்னை.....
என் தாயாக அன்பு செய்யவா?
தந்தையாக பாசம் செய்யவா...
ஆசிரியராக மதிப்பு செய்யவா?
கடவுளாக வணங்கவா?
என்ன செய்தாலும் ஈடஅகத்து உனக்கு..
எனக்கு நீ உணவு கொடுத்துகொண்டே இருக்கிறாய்...
ஒரு நாள் மட்டும் நான் பொங்கல் இட்டு, அது பொங்கி உன் வாயை தொடும், நீ உண்டு மகிழ்வாய் என நினைக்கிறேன்...
அன்று மட்டும்தானே எந்த மக்கள் உன்னை கொண்டாடுகிறார்கள், நீயும் நேரமின்றி திகைப்பாய்.... அதற்காகத்தான் நான் கத்துகிறேன், பானை நிரம்பி பொங்கும்போது "பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்" என்று ...
நீயும் செவி சாய்த்து வந்து உண்ண முடியும்...

எழுதியவர் : மாதவன் (12-Jan-13, 6:08 pm)
பார்வை : 90

மேலே