சருகுகள்
தாவரத் தலைகளின்
நரைமுடி.
மரப் புத்திரர்களால்
நில
முதியோர் இல்லத்தில்
தள்ளப்பட்ட வயோதிப பெற்றோர்.
உங்களால்
மதிக்கப்படாத போதும்
மிதிக்கப்பட்டதுண்டு
திரட்டி எடுத்து
தீ மூட்டி
புகை கிளப்பி
நுளம்பு கொல்வீர்
வாழைக்காய்
பழுக்கவைப்பீர்
என்றாலும்
ஒற்றையடி பாதையில்
ஒத்தையாய் போகையில்
எங்கள் சலசலப்பில்
தைரியம் இழக்கும்
நீங்கள் மட்டும் என்னவாம்?
நாளை நாங்கள்தான்
.

