நூறு கவிதை.... இது நூறாவது கவிதை....
சதம் அடிப்பதில் உண்மையில்
சந்தோசம் யாருக்கு....
கருத்துடன்,
கவனம் கலையாமல்
கண் விழித்து,உழைத்து, படித்து
தேர்வில் சதம் பெற்று
தானும் மகிழ்ந்து
ஆசானுக்கும்,
அவன் படித்த பள்ளிக்கும்
நல்லதொரு பெயர் வாங்கி கொடுத்து
தன்னை ஈன்ற பெற்றோரின்
பெருமிதத்தை கண்டு
மகிழும் மாணவன்...
மத்தியான வேளையில்
மட்டை பந்து போட்டியில்
மட்டற்ற ரசிகர்களின்
ஆரவாரத்தோடு...
ஆடாமல் அசையாமல்
தன்னை நோக்கி
ஓடிவரும் பந்தினை
கட்டையால் ஓங்கி அடிக்க-அது
கட்டிடத்தை தாண்டி பறக்க
சதம் அடித்த களிப்பில் இரு
கைகளை உயர்த்தும் வீரன்...
பத்தும் பதினைந்தும்
பாதியிலே போக...
பல பேர் குடியாலே
பாடையிலே போக...
நலமாக நோவு இல்லாமல்
வாழ்வதே இக்காலத்தில்
முடியாமல் போக...
பாட்டியோட தாத்தா மட்டும்
பதினாறும் பெற்று
பேரபிள்ளைகள் படை சூழ
பக்குவமாய் பொக்கு வாய் சிரித்து
சதம் அடித்த களிப்பில் செய்திதாளில்
வண்ண புகைப்படமாக வந்திருக்கும்
கொள்ளுதாத்தா.....
அடுத்து சதம் அடித்த சந்தோசம் யாருக்கு ???
அது எனக்கு....
அன்றாட பணியில்
அலுத்துபோனாலும்...
அழகிய சொர்க்கமாய் இருக்கும்
இங்கு வந்து செல்வதையே
விரும்பும் மனம், சில மாதங்கள்
காணாமல் போனாலும்
தட்டு தடுமாறி திரும்பி வந்து
திக்கி திணறி
ஒரு வழியாக நானும் இன்று
இத்தைதிருநாளில்
சதம் அடித்துவிட்டேன்
எனக்கென்று ஒரு சரித்திரம்
உருவாக்கிவிட்டேன்....
அடியெடுத்து வைத்த நாள் முதலாய்
ஆதரவாய் கரம் பிடித்து
அழகாய் கருத்தும்
அளவாய் மதிப்பெண்களும் கொடுத்து
அன்புக்கடளிலே மூழ்க வைத்த
அன்பான பண்பான
பெரியோர்களுக்கும்,
அனுபவமிக்க ஆசான்களுக்கும்
அண்ணன்களுக்கும்,அக்காகளுக்கும்
தம்பிகளுக்கும், தோழர்களுக்கும் தோழிகளுக்கும்..... இந்த நூறாவது கவிதை சமர்ப்பணம் செய்வதில் மிக்க மகிழ்ச்சி...
என்றும் அன்புடன்,
-PRIYA