நட்பென்னும் சிறகுகளோடு...

காக்காய் கடியிலும்...
குடுமிப் பிடியிலும் துவங்கியது.
நீள்கிறது...காலனின்....
கயிறு விழும் வரை...
திரும்பத் திரும்ப முத்தமிட்டு
இரசிக்கிறது...
வாழ்ந்த நாட்களை.
**********************************************************
நான் நீயாகவும்...
நீ நானாகவும்...வாழ்கிறோம்..
வாழும் நட்பில்....
பேதம் தெரியாமல்.
அது...
ஒரு கடவுளை
இரண்டு பெயர்களில்
அழைப்பதைப் போல் இருக்கிறது.
**************************************************************
சுகம்...துக்கம்...
காதல்...காமம்....
என இடர்ப்படும் துயர்களைப்
எல்லாம் பகிர்கிறோம்.
இடரும் படிகள் கூட
ஏணிகள் ஆகிக் கொண்டிருக்கிறது...
நாம் கை கோர்த்த பின்னர்.
*****************************************************************
காதல்....
ஒரு பறவை.
கூடடையும்.

நட்பு....
வானம்...
விரியும்...விரியும்...அடங்காமல்.
தன் பரப்பில் இடம் தரும்...
பறவைகளுக்கும்.
******************************************************************
அன்னையும்...பிதாவும்...
வீடு தந்த தெய்வம்..
வீதியில்....
நம் கை கோர்க்கும் தெய்வம்..
நட்பு.
*******************************************************************

எழுதியவர் : rameshalam (14-Jan-13, 12:03 pm)
பார்வை : 105

மேலே