யாருமில்லை ?

பங்கீட்டு உந்துவாம்
பட்டணத்தில் செல்லும்போது நான்
ஏமாற்றதே என்னிடம்
இவ்வளவு சிறிய தூரத்திற்கு
ஏன் இந்த அநியாய விலை என்றேன்

இளம் பெண்களை
இடித்து வந்ததற்கும் சேர்த்துதான்
இந்த விலை என்றான் ஏளனமாய் !

அரசியலாட்சி கொண்டுவந்த
அவல நிலை கண்டு
என் குல பெண்களின் மானமெல்லாம்
இவ்வளவு விரைவில் விலைபோகுமென்று
ஒரு நாளும் நினைத்ததில்லை
உதவாக்கரை என் போல் யாருமில்லை ?






எழுதியவர் : . ' . கவி (3-Nov-10, 10:28 am)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 574

மேலே