வேண்டும்
அம்மை அப்பனின் பாசம் வேண்டும்
ஆசிரியர்களின் ஆசி வேண்டும்
இறைவனின் அருள் வேண்டும்
ஈகை செய்யச் செல்வம் வேண்டும்
உண்ண நல் உணவு வேண்டும்
ஊருணி நீர் போல் உதவ வேண்டும்
எல்லோரிடம் அன்பு வைக்க வேண்டும்
ஏற்றமிகு வாழ்வு பெற வேண்டும்
ஐயமின்றிக் கல்வி பயில வேண்டும்
ஒற்றுமையுடன் கூடி வாழ வேண்டும்
ஓம்கார பொருள் அறிய வேண்டும்
ஒளடதம் இன்றி நல்வாழ்வு வேண்டும்
எஃகு போல் மனஉறுதி வேண்டும்