போதையில் என் பேனா

கரு மை தினம் குடித்து
பெரும் போதை ஏறியதால்
என் பேனா
வாய்க்கு வந்தபடி
உளறிக்கொட்டுதடி..

வறுமை தெரியவில்லை அதற்கு
வண்ண மை வாங்கிவா என்று
அதட்டி கேட்குதடி
என்னை மிரட்டிப் பேசுதடி...

பெருங்கவிஞன் நானென்று
என்னிடமே கதை விட்டுத் திரியுதடி
பெண்ணின்
கருங்குழலைப் பார்த்துவிட்டால்
கவியரசு பேனாவை கைதட்டி அழைக்குதடி
போட்டிக்கு வாவென்று தொடைதட்டிப் பேசுதடி.

கால் நீட்டி படுத்துக் கொள்-என்று
இடம் காட்டி நானும் சென்றேன்
விடமாட்டேன் காகித பெண்ணை-என்று
வீர வசனம் பேசுகின்றான்..
போதைக்கு அடிமையாகி தினம்
என் உசுரை வாங்குகின்றான்.....

எழுதியவர் : ஹரிராஜா மாணிக்கவேல் (16-Jan-13, 3:23 pm)
சேர்த்தது : raja.arp
Tanglish : pOthaiyil en pena
பார்வை : 84

மேலே