தேய்ந்த ரேகையில் தெரியும் பிம்பம் (அகன்,ரமேஷ்,சரவணா)
அம்மா...கற்றுக் கொடுத்த பழக்கம்தான்..
எழுந்தவுடன் கைவிரித்துப் பார்த்தல் என்பது..
"மகா லஷ்மி" தேடி வருவாளாம்.
பாத்திரங்களால் தேய்ந்தது..அம்மாவின் கை.
பட்டம் வாங்கியும்.. என் வேலைக்காகத் தேய்ந்தது.
அவளின் ரேகை தேய்ந்த காலத்தில்
சேர்த்திருக்கிறேன் முதியோர் இல்லத்தில்.
வெகுநாள் பழக்கம்..அம்மாவாலும் மாற்ற முடியாது.
காலையில் கை விரிக்கும் அம்மாவின்...
தேய்ந்த ரேகையில் தெரியும் பிம்பம்...
எந்த லஷ்மி....யினுடையதாய் இருக்கும்?