காற்றுவெளியிடை கண்ணம்மா.....(பாகம் 3)

புன்னகைத்துவிடு
அதனாலும்
பூக்கின்றன சில பூக்கள்!
***********************************
என்
கனவுலகின்
ஒற்றை நுழைவுச் சீட்டும் உன்னிடம்…
காட்சிகளினின்றி விடிகிறது இரவுகள்.
*********************************************************
நீ காற்று....
சுவாசித்தல்
எனக்கு மிகவும் அவசியம்...
*****************************************
உதட்டுச் சாயம் தவிர்
சொரணையற்று
கிடக்கிறது உன் உதடுகள்
எதுவும் சொல்லாமலே....
**************************************
ஒரு பொய்யை
பொய்யில்லாமல்
சொல்லத் தெரிகிறது....
***********************************
பூ
நார்
சேர்த்தும் கட்டலாம்
பிரியாமல் இருக்க வேண்டும்..
*********************************************

எழுதியவர் : ஆண்டன் பெனி (16-Jan-13, 3:59 pm)
பார்வை : 142

மேலே