தேடமாட்டேன்.. தேடமாட்டேன்

தேடினேன்
தேடினேன்
தேடிக்கொண்டே இருந்தேன்

கால்கள் ஓய்ந்தன
கண்கள் களைத்தன
சற்றே அமர்ந்த நான் அறியாமல்
உறங்கியும் போனேன்

உறக்கம் களைந்து
எழுந்த போது
கோபம் பாதி ; எரிச்சல் பாதி

சத்தமாக உனை அழைத்தேன்
சலனமின்றி வந்தாய்
அனைத்தும் அறிந்தவளாய்
கண் முன் இருந்த புத்தகமெடுத்து
கையில் கொடுத்து சென்றுவிட்டாய்

இத்தனை அருகிலா...?
எப்படி நான் பார்க்கவில்லை.....?
என்ன மாயம் செய்கிறாய் ?
நீ வந்தால் கிடைக்கிறது

எல்லாமே எல்லாமே
உன்னாலே கிடைக்கயிலே
புத்தகம் என்ன விதிவிலக்கா...?

கைக்கு எட்டும் தூரம் கடக்கவும்
நீ வேண்டும் என்ற போது
காலம் என்ற கடல் கடக்க
எனக்கே எனக்காக

கடவுள் தந்த தோனி நீ
கருவாய் எனை சுமந்த
கருணை கடவுள் நீ  என்பதனால

தேடமாட்டேன்  கடவுளை
என்றுமே எங்குமே ......

எழுதியவர் : கன்னியம்மாள் (16-Jan-13, 5:00 pm)
பார்வை : 160

மேலே