மூவர் முயற்சி ====2 அசரலாம்
புது முயற்சி...கூட்டு முயற்சி...வாருங்கள்..
தோழர்களே.....
பாடு பொருள் பல ரகம் வேண்டியும்...
வெகுஜன சமூக பிரக்ஞாயுத்திகள் விரும்பியும்...
எழுது திறனுச்சி நோக்கிய ஒரு பயணத்திற்கும் படைப்பாளிகள் விரல் பிடித்தி நடை பழகிப் பார்க்க எனக்கு ஆசை...
ஒரு தலைப்பிற்கான இரு படைப்பாளிகள் கற்பனை பா ரதமோட்டினால் தமிழ்ச்சுவைச்சாலை எப்படி இருக்கும் என உணர விரும்பினேன்..
எனவே தான் இரு படைப்பாளிகள் இணைந்து படைப்பு அளிக்க வேண்டினேன்..சரவணனும் ரமேஷாலாமும் இணைந்து சில படைப்புகளை இங்கு படைத்தனர் ..
.மகிழ்ந்தேன்..
தலைப்புகள்....இதோ...
1. காயும் ஈரம்...
2.சாயும் நிலா...
3.ஓயா பசி...
4. தேய்ந்த ரேகைகளில் தெரியும் பிம்பங்கள்..
5.வறுமைப் புயலில் சிக்கிய வரிகள்...
ஒருவர் 10 வரிகள் ...
அதைத் தொடர்ந்து மற்றவர் 10 வரிகள்
வரி ஒன்றுக்கு 4அல்லது 5 சொற்கள்.....
பொதுவாக காதல்.வாழ்வு உணர்வுகள் இயற்கை என எழுதி வந்த ரமேஷாலாம் ''ஓயா பசி ..' எனும் தலைப்பில் வெகுஜன சமூக சிக்கல்களை பாடு வரிகளாக அளித்துள்ளார்...இவ்வகையில்
''ஓயா பசி" .. எனும் தலைப்பில் ரமேஷாலாத்தை வழிமொழிந்து சரவணன் வரிகள் அளித்துள்ளார்...நானும் முடிப்பு வரிகள் சில அளித்துள்ளேன்...கீழே காண்க...
ஓயாப் பசி ( அகன் ரமேஷ் சரவணா)
நிழலைப் போலத்தான்....
என்கூடவேதான் இருக்கிறது...
வண்ணமில்லாவிட்டாலும்..
வர்ணபேதமில்லாமல்.
இது வயிற்றில் இருப்பதனால்...
கர்ப்பம் போல் பத்துமாதத்தில்
இறக்கிவைக்க இயலாது.
இதயத் துடிப்பைப் போல் இருந்துகொண்டே
இருக்கும்...
இருக்கும்வரை. இறக்கும் வரை..
"அன்னம்" என்ற சொல்லால்
அடங்கும் இது...
எழுந்து நிற்கும் "எண்ணம்"
என்ற சொல்லால்..
யாவரிலும்...
உடலும் உடல் சார்ந்த
பசியும் இருக்கும்வரை.
(சரவணன் தொடர்கிறார் )
கடல் கடந்து ஓடச் சொல்லும்...
கரை வேட்டியை திருடச் சொல்லும்...
பிள்ளையவள் அழுகை பொறுக்கா
பெற்றவளின் பெண்மைதனை
விலைக்குக் கேட்கும்....
தேடிப்போய் வருவதில்லை.....
அவரவர் அளந்தெடுத்த
ஒரு சாண் கூட்டுக்குள் அனுதினமும்
வந்தடையும்..... இந்த
உலகம் சுற்றும் முரட்டுக் குருவி....
(எனது முடிப்பு.)
ஓய வைக்கலாம் இதை..
ஊழலுக்கு உருப்பெடுப்பு..
முழு யதார்த்த கல்வி
எவருக்கும் கட்டாய உழைப்பு
உழவனுக்கும் மீனவனுக்கும்
உயர்குடி தகுதியும் ...
பொதுவுடைமை பாத்திகளில் மட்டுமே
விளைச்சல் -கூட்டுறவு கலப்பையால்..