அழகு

ஆழ்கடலின் பேரஅமைதி அழகு.
காற்றலையின் கவிசெய்த பாட்டழகு.
கடல் கண்ணாடிக் குடுவைக்குள் மீனழகு.
குழந்தைக்கு பொய்க்கோபமுகம் அழகு.
கலங்கின பொழுதில் நிலவு அழகு.
கத்தரி வெம்மையில் கார்மேகம் அழகு.
புழுதிக்காட்டின் நடுவில் பசுஞ்சோலை அழகு.
ஆடிவரும் நீரோடினால் நதிக்கழகு.
முகம்மறைத்து நீராடும் நீயும் அழகு.
அதில் நீர் வரைந்த கோலங்கள் மிகமிக அழகு.
நடுவினில் வகுடெடுத்த நிலம் அழகு.
நீர்சொட்டிக் கட்டிய கூந்தலில் ஏறிய மலரழகு.
கரைமேட்டில் வளர்ந்திருக்கும் மரமழகு.
அதன் மடியில் கொஞ்சிச் சிரிக்கும் கிளியழகு.
மயங்கி கொத்திவிடும் உங்கனி அழகு.
உடையில் நடைசெய்த உன்னிடை அழகு.
பின்தோளில் நீகொண்ட மச்சம் அழகு.
காலைக் கதிரவனின் சிவப்பழகு.
காணக்காணத் துடிக்கும் காதல் அழகு.
கண்டுவிட்டால் கடவுளும் பேரழகு.

எழுதியவர் : மீன் (18-Jan-13, 9:34 am)
பார்வை : 540

மேலே