அம்மா கவிதை

உன்னுள் கருவேற்றி
ஈரைந்து மாதங்கள்
கருவறையில் சுமந்து
உன் கண்ணீருக்கும்
என் அழுகைக்கும் இடையே மறுப்பிறப்பெடுத்தவள்…
என் அழுகைக்கு
நேரம் அறிந்து
காரணம் அறிபவள்…
நான்
நடை பழக
எனக்கு கால்களாக
இருந்தவள்…
நான் விழுந்து
அழும் முன்னே
கண்களில் நீர்கோர்த்து
என் வலி உணர்பவள்…
நான் படிக்கும் வயதில்
தூக்கத்தை தொலைத்தவள்…
உள்ளத்தில் வேதைனை
பல இருந்தும்
நெஞ்சத்தில் வைராக்கியத்தோடு
என்னை வளர்த்தவள்…
அதிக வேலையென்றாலும்
என்னை தூங்க வைக்க
தன் தூக்கம் தொலைத்தவள்…
என் உடல்நிலை கோளாறில்
தன்னை வருத்திக்கொள்பவள்…
இன்றும்எனக்கு
இரண்டாம் உயிராய்
வாழ்பவள்…
உன்னை வர்ணிக்கும் அளவு
கவிஞன் ஆகிவிட்டேனோ
தெரியாது ஆனால்
என்னை கவிஞன்
ஆக்கி விட்டதும்
நீ தான்…
சொல்லியவன்
பிழை ஏதும் இல்லாமல்
சரியாக சொல்லியிருக்கிறான்
மாதா
பிதா
குரு
தெய்வம்
என்று இதில்
உன்னை மறந்திருந்தால் வாக்கிய
பிழையாக மாறியிருக்கும்…
கையேந்துபவன் கூட
அன்னையின் பாசத்தில்
வீழ்ந்தவனாய்
அம்மா என்றே
அழைக்கிறான்…
உனக்கு
ஆஸ்கார் பரிசோ
நோபல் பரிசோ
வாழ்நாள் தியாகி பட்டம்
ஏதும் தேவையில்லை
நான் உன்னை
தினம் தினம்
அழைக்கும்
“அம்மா “
என்ற சொல்லைவிட…